Latest

பொது அமைதிக்குக் கேடு: அம்னோ, பெர்சாத்து இளைஞர் பிரிவுத் தலைவர்கள் மீது பாயும் வழக்கு

புத்ராஜெயா, ஆகஸ்ட்-20 – பொது அமைதிக்குக் கேடு விளைவித்ததன் பேரில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr Akmal Salleh நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.

பெர்சாத்து இளைஞர் பிரிவுத் தலைவர் Muhammad Hilman Idham உள்ளிட்ட மேலும் சிலர் மீதும் அதே குற்றச்சாட்டு சுமத்தப்படவிருப்பதாக, AGC எனப்படும் தேசிய சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Akmal தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் Hilman ஒரு டிக் டோக் கணக்கிலும் வெளியிட்ட பேச்சு தொடர்பில் போலீஸ் விசாரணை நடத்தி அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தது.

ஆதாரங்கள் அடிப்படையில் அவற்றை பரிசீலித்ததில், Akmal, Hilman இருவரையும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்ட முடிவுச் செய்துள்ளதாக AGC அலுவலகம் கூறியது.

‘SHA Abrienda’ என்ற டிக் டோக் கணக்கில் பதிவேற்றியிருந்த வீடியோ தொடர்பில் Siti Hajar Aflah Sharuddin என்பவரும் அதே குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

இவ்வேளையில், cikguchandra3 என்ற டிக் டோக் கணக்கில் வெளியிட்ட பதிவுத் தொடர்பில், டிக் டோக்கில் பிரபலமான S. சந்திரசேகரன் 1998-ஆம் ஆண்டு தொடர்பு – பல்லூடகச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுகிறார்.

அந்நால்வரும் மேஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் விரைவிலேயே குற்றம் சாட்டப்படுவர்.

அவர்களின் நடவடிக்கைகள் பொது அமைதியைக் கெடுக்கும் வண்ணம் இருந்தன அல்லது இணைய வசதியை அவர்கள் தவறாகப் பயன்படுத்தினர் என AGC கூறியது.

எந்தச் சம்பவம் தொடர்பில் அவர்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள் என AGC குறிப்பிடவில்லை என்றாலும், அண்மையில் Jalur Gemilang தேசியக் கொடி தலைக்கீழாகப் பறக்க விடப்பட்ட சில சம்பவங்கள் தொடர்பில் அந்நால்வரும் பேசியிருந்ததே அதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!