
ஜகர்த்தா, ஆக 25 – இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்தில் உள்ள Sagara மலையில் தாழ்வெப்பநிலை காரணமாக உடலில் வெப்பம் குறைந்து சரிந்து விழுந்த 16 வயது மலேசிய மலையேறி மீட்கப்பட்டார்.
சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் ஒரு மணியளவில் Sagara கிராமத்திற்கு அருகிலுள்ள பாதையின் நான்காம் இடுகையில் பல தோழர்களுடன் மலையேறிக் கொண்டிருந்தபோது அந்த மலேசிய இளம்பெண் மயக்கமடைந்தார்.
அப்போது அருகே மலையேறிக் கொண்டிருந்த சிறப்பு குற்றப் பிரிவுத் தலைவர் Inspector Hadiansyah அந்த மாணவியை காப்பாற்றினார்.
அம்மாணவி கீழ்தள முகாமிற்கு தூக்கிச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் Base Campமிற்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு அந்த மாணவி சுயநினைவுக்கு திரும்பியதாக போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.