Latestமலேசியா

கிள்ளான் பள்ளத்தாக்கை நேற்றிரவு அலற வைத்த புயல் காற்று

கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – கிள்ளான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு கனமழையுடன் புயல் காற்று வீசிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேரு, கிள்ளான், குவாலா சிலாங்கூர், ஷா ஆலாம் ஆகியப் பகுதிகள் அதில் பாதிக்கப்பட்டன.

இடி மின்னல் சத்தத்துடன் ஆங்காங்ஙே மரங்கள் சாய்ந்து விழுந்தன;

பேரங்காடிகளின் நுழைவாயில் கண்ணாடி கதவுகள் உடைந்து சிதறின.

சாலை அங்காடி வியாபாரிகளின் கூடாரங்களும் காற்றில் பறந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

குறிப்பாக மேரு, Jalan Paip-பில் Perodua Myvi கார் மீது மரம் சாய்ந்ததில் ஒரு மாதுவும் அவரின் பிள்ளையும் சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளாகினர்.

கோலாலம்பூர் புத்ராஜெயா வட்டாரங்களில் இன்று விடியற்காலை 2 மணி வரை புயல் காற்றுடன் கூடிய கனமழைப் பெய்யுமென, மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறை முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!