
மென்சஸ்டர், ஆகஸ்ட்-26 – நடுவானில் அவசரக் கதவைத் திறக்க பெண் பயணி முற்பட்டதால், மொரோக்கோ செல்ல வேண்டிய Ryanair விமானம் Manchester விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.
நேற்று காலை 9.30 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் அப்பயணி, அவசரக் கதவின் பிளாஸ்டிக் உறையைப் பிய்த்து விட்டார்.
எனினும் அதனைக் கண்ட மற்ற பயணிகள் உடனடியாக அப்பெண்ணைத் தடுத்து விமானப் பணியாளர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவசரக் கதவோரமாக இருந்த இருக்கையிலிருந்து அப்பெண் அகற்றப்பட்டார்.
விமானக் கேப்டன் கதவருகே காவலுக்கு நின்றார்.
மென்சஸ்டரில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதும் அப்பெண் வெளியேற்றப்பட்டார்.
தொழில்நுட்பக் குழுவினர் சோதனை நடத்தி பழுதான பாகங்களைச் சரி செய்ததும், விமானம் மொரோக்கோ பயணமானது.