
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – கடந்த வெள்ளி – சனிக்கிழமைகளில் நாடு முழுவதும் 87 கேளிக்கை மையங்களில் போலீஸ் நடத்திய அதிரடிச் சோதனைகளில், 215 வெளிநாட்டு GRO பெண்கள் கைதாகினர்.
அவர்கள் மியன்மார், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், சீனா, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
பெர்மிட் இன்றி இயங்கி வரும் கேளிக்கை மையங்களைக் குறி வைத்து அச்சோதனைகள் நடத்தப்பட்டன.
87 மையங்களில் 66 மையங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார்.
உரிமம் இன்றி மதுபானங்கள் விற்றது, அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் தங்கியிருந்தது, பெர்மிட் இல்லாமல் நாட்டுக்குள் நுழைந்தது, கள்ளக்குடியேறிகளை வேலைக்கு அமர்த்தியது போன்ற குற்றங்களும் கண்டறியப்பட்டன.
குடிநுழைவுச் சட்டம், கேளிக்கை தொடர்பான மாநில சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் விசாரணை நடைபெறுவதாக குமார் சொன்னார்.