Latestமலேசியா

இந்திய மாணவர்களுக்காக RM1 மில்லியன் கல்வி உதவித்தொகை திட்டம்; ‘Unitar’ & கெடா மாநில ம.இ.கா இளைஞர் பிரிவினரின் முன்னெடுப்பு

கெடா, ஆகஸ்ட் 25 – யுனித்தார் அனைத்துலக பல்கலைக்கழகமும் (UNITAR), கெடா மாநில ம.இ.கா இளைஞர் பிரிவினரும் (PUTERA MIC) இணைந்து மாநிலத்திலும் அதற்கு அப்பாற்பட்ட பகுதிகளிலுள்ள இந்திய மாணவர்களுக்காக 1 மில்லியன் ரிங்கிட் கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்த உதவித்தொகை, தகுதியான இந்திய மாணவர்கள் யுனித்தார் பலக்லைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் மேற்கல்வியை தொடருவதற்கு வாய்ப்பளிப்பதோடு கல்லூரி கட்டணங்களை உள்ளடக்கிய இத்திட்டத்தின் விண்ணப்ப விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் இந்திய மாணவர்கள் தங்களின் கல்வி மற்றும் தொழில் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு தளமாக அமையுமென்று என்று சுங்கை பட்டாணி Unitar பல்கலைகழகத்தின் உதவி மேலாளர் ஜீவபாலன் ஜெயராமன் தெரிவித்தார்.

மாநில ம.இ.கா.இளைஞர் பிரிவு தலைவர் தினேஷ்குமாரன் பத்மநாதன், இந்த முயற்சி நிதி தடைகளை நீக்கி, இந்திய இளைஞர்கள் உலகத் தரமிக்க உயர்கல்வியினை பெற்று கொள்ள இயலும் என்று குறிப்பிட்டார்.

இந்த 1 மில்லியன் ரிங்கிட் கல்வி உதவித்தொகை, சமூக முன்னேற்றத்தையும் அடுத்த தலைமுறை இந்தியத் தலைவர்களை உருவாக்கும் முயற்சியையும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!