ஈப்போ, ஆகஸ்ட் 27 – 17 வயது மாணவியிடம் உடல் ரீதியான பாலியல் குற்றங்களை புரிந்த 38 வயதான ஆசிரியர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவ்வழக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி இன்று நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
இக்குற்றம் ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டால், சந்தேக நபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இக்குற்றம் ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டால், சந்தேக நபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
15,000 ரிங்கிட் ஜாமீன் அந்நபருக்கு வழங்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்டவரையும் சாட்சிகளையும் வழக்கு முடியும் வரை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது..
இந்த வழக்கு வரும் அக்டோபர் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதென்று அறியப்படுகின்றது.