
கோலாலம்பூர், செப்டம்பர்-2 – நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நாடறிந்த நகைச்சுவை கலைஞர் சத்தியாவின் இடது கால் விரல்களில் ஒன்று மட்டுமே துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 31-ஆம் தேதி பெருவிரல் மட்டுமே நீக்கப்பட்ட நிலையில், அதே நிலைக்கு ஆளாகலாமென என முதலில் ஐயுறப்பட்ட மேலுமிரு விரல்கள் காப்பாற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அவ்விரு விரல்களிலும் தற்போது மருந்து மட்டுமே போடப்படுகிறது என்றார் அவர்.
61 வயது சத்தியாவின் இடது காலில் 3 விரல்கள் துண்டிக்கப்பட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன; இந்நிலையில் மேலும் கிருமிப் பரவினால் இடது காலை பாதம் முதல் கனுக்கால் வரை துண்டிக்க வேண்டி வரலாம் என சத்தியாவும் கூறியிருந்தார்.
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அம்பாங் மருத்துவமனைக்கு மேல் பரிசோதனைக்காக அவர் சென்ற போது, கால் துண்டிப்பு தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
Pi Mai Pi Mai Tang Tu என்ற தொலைக்காட்சி நகைச்சுவை நாடகத் தொடர் மூலம் புகழ்பெற்றவரான சத்தியா, நீண்ட காலமாகவே நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.