
ஷா ஆலம், செப்டம்பர் 9 – நேற்று சிலாங்கூர் தஞ்சோங் காராங் சுங்கை சிறே பகுதியில் (Ban 3, Parit 1, Sungai Sireh, Tanjong Karang) இளைஞர் ஒருவர் தனது வீட்டு தோட்டத்திலுள்ள மரத்தில் தொங்கியப்படி உயிரிழந்து காணப்பட்டார்.
25 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞருக்கு இதற்கு முன்னதாக எந்தவொரு நோயும் இல்லை என்றும் உடலில் குற்றவியல் கூறுகள் எதுவுமில்லை என்றும் கோலா சிலாங்கூர் துணை மாவட்டக் காவல் துறைத் தலைவர், முஹமட் அம்பியா நோர்டின் (Mohd Ambia Nordin) தெரிவித்தார்.
இந்நிலையில் மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே அவர் இறந்ததை உறுதி செய்த நிலையில் தற்போது அவரின் உடல் தஞ்சோங் காராங் மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனை செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும், சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல் அறிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள கால் நிலையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டுமென போலீசார் கேட்டுக்கொண்டனர்.