
ஈப்போ, செப்டம்பர் 10 – இன்று காலை சுல்தான் இட்ரிஸ் ஷா சாலையில் கணவன் மனைவி பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த சம்பவத்தில், 55 வயதான அந்த ஆடவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் அவரது மனைவி சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார் என்றும் தொடர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்றும் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை (Bomba) தெரிவித்தது.
ஈப்போ தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒன்பது வீரர்கள், Fire Rescue Tender (FRT) வாகனத்துடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு காரில் சிக்கியிருந்த உயிரிழந்தவரை வெளியேற்றினர்.
உயிரிழந்தவரின் உடல் தற்போது போலீசாரிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.