ஒரே ஷிப்ட்டில் 21 அவசர சிசேரியன் அறுவை சிகிச்சை; மகப்பேறு மருத்துவரிடம் விசாரணை

அஸ்ஸாம், செப் 10 – இந்தியாவில் அஸாம் (Assam) மாநிலத்தில் மூத்த மகப்பேறு மருத்துவ நிபுணர் ஒருவர் பொது மருத்துவமனையில் ஒரு Shiftடில் 21 அவசர சிசேரியன் (caesarean) அறுவை சிகிச்சைகளைச் செய்ததற்காக விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.
மோரிகான் (Morigaon) பொது மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் காந்தேஸ்வர் பார்டோலோய், ( Kantheswar Bordoloi ) செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 3.40 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.50 மணி வரை அந்த அறுவை சிகிச்சைகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
அவர் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான விளக்கம் கோரி காரணம் கோரும் அறிக்கையை உள்ளூர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்த கவலைகளையும் இந்த அறிக்கை எழுப்பியுள்ளது.
ஒவ்வொரு அறுவை சிகிச்சை குறித்தும் மூன்று விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அந்த 61 வயதான மருத்துவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோரப்பட்ட தகவல்களில் கருத்தடை நடைமுறைகள், கரு அழுத்த பதிவுகள், நோய்வாய்ப்பட்ட பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் இருந்து வருவது மற்றும் உதவி செய்த மருத்துவ ஊழியர்களின் பங்கு ஆகிய தகவல்கள் குறித்தும் அந்த மருத்துவரிடம் விளக்கம் அளிக்கும்படி கேட்கப்பட்டுள்ளன.
பரபரப்பான பொது மருத்துவமனைகளில் சிக்கல் இல்லாவிட்டால் சிசேரியன் அறுவை சிகிச்சைகள் 15 நிமிடங்களுக்குள் செய்யப்படலாம் என்று விளக்கி தனது நடவடிக்கையை டாக்டர் Kantheswar Bordoloi நியாயப்படுத்தியுள்ளார்.
தாம் விரைவாக வேலை செய்ததோடு தேவையான அனைத்து மருத்துவ நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக அந்த மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.