Latest

மலாக்காவில் பரபரப்பு: குழந்தையை கடத்த முயன்றார் என சந்தேகிக்கப்பட்ட பெண் உண்மையிலேயே நிரபராதி; போலீஸ் உறுதி

மலாக்கா, செப்டம்பர் 10 – கடந்த திங்கட்கிழமை, மலாக்கா, அயர் கெரோ ஆரம்ப பள்ளி ஒன்றில் தனது மகனின் நண்பனை சிறிய சண்டை குறித்து கண்டித்ததற்காக, 28 வயது பெண் ஒருவர் குழந்தையை கடத்த முயன்றதாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி முற்றிலும் தவறு என்பதனை போலீசார் விளக்கியுள்ளனர்.

அழிப்பான் (Pemadam) தொடர்பான சண்டையைப் பற்றி அவர் அம்மாணவர்களிடம் விளக்கம் கேட்டதை, சிலர் தவறாக புரிந்துக் கொண்டு பள்ளி புலன குழுக்களில் “கடத்தல் முயற்சி” என தவறான தகவலைப் பரப்பியுள்ளனர்.

இதை தெளிவாக புரிந்துக் கொள்ளாமல் சர்ச்சைக்குள்ளான மாணவனின் தாய், தனது மகனின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டு போலீசில் புகார் அளித்திருக்கின்றார்.

இது தொடர்பான மேல் விசாரணையை மேற்கொண்ட போலீசார்இது ஒரு தவறான புரிதலே தவிர கடத்தல் முயற்சி அல்ல என்று தெளிவுபடுத்தினார்.

மேலும் பொதுமக்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!