Latestமலேசியா

ஏன் போர்டிக்சனோடு நிறுத்தி விட்டீர்கள்? எல்லாவற்றையும் மாற்றுங்களேன்! நெகிரி மந்திரி பெசார் காட்டம்

சிரம்பான், செப்டம்பர்-11 – போர்டிக்சன் பெயரை Pantai Dermaga என மாற்றுமாறு சில அரசு சாரா இயக்கங்கள் முன்வைத்துள்ள பரிந்துரையை, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் சாடியுள்ளார்.

“ஏன் PD-யோடு நிறுத்தி விட்டீர்கள்? போர்ட் கிள்ளான், கோலாலம்பூர், ஜோர்ஜ்டவுன் பெயர்களையும் மாற்றி விடுங்களேன்” என டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் கிண்டலாகக் கேட்டார்.

ஆங்கிலப் பெயரை சாக்காக வைத்து பெயர் மாற்றக் கோருவதற்கு ஆர்வம் காட்டுவோர், மற்ற நகரங்களை தொடாதது ஏன் என்றார் அவர்.

உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுப்பயணிகள் மத்தியில் புகழ்பெற்ற கடற்கரை உல்லாசத்தலமாக, இன்று நேற்றல்ல…நீண்ட காலமாகவே போர் டிக்சன் விளங்குகிறது.

PD என்ற பெயர் அனைவருக்கும் பரிச்சயமாகி விட்டதால், அதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை என, போர் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான மினுடன் சொன்னார்.

Pertubuhan Pemerkasaan Identiti மற்றும்
Ikatan Muslimin Malaysia அமைப்புகளின் தலைமையில், சில NGO-கள் இணைந்துகொண்டு போர் டிக்சன் பெயரை மாற்ற முன்னதாக பரிந்துரைத்தன.

ஆங்கிலப் பெயர் காலனித்துவ ஆட்சியை நினைவுப்படுத்துவதால், Pantai Dermaga என்ற மலாய் பெயரை வைக்குமாறு அவை கேட்டுக் கொண்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!