
ஷா அலாம், செப் 11 – பள்ளிக்குச் செல்லாமல் இருக்க கடத்தல் முயற்சியை ஒரு சாக்காகக் கூறியதை ஒப்புக்கொண்ட 13 வயது பள்ளி மாணவனை போலீசார் கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.
அவனது காலணிகள் பூனை மலத்தால் அசுத்தமானதற்காக பள்ளிக்கு நடந்து செல்லும்போது கிட்டத்தட்ட கடத்தப்பட்டதாகக் கூறிய அந்த மாணவன் இன்று இதற்கு முன்னதாக போலீசில் பொய்யான புகார் செய்ததையும் ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
பின்னர் அந்த மாணவனும் அவனது 37 வயது தந்தையும் மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
விசாரணையின்போது அந்த மாணவன் செய்திருந்த புகார் முற்றிலும் பொய்யானது என தெரியவந்தது. பூனையின் மலத்தால் பள்ளி காலணிகள் அழுக்காகிவிட்டதால் பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை என்பதால், தனது தந்தையிடம் ஒரு சாக்காக இந்த புகார் அளிக்கப்பட்டதாக அந்த மாணவன் ஒப்புக்கொண்டான்.
இன்னும் படித்துக்கொண்டிருப்பதால் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனினும் சம்பந்தப்பட்ட மாணவனுக்கும் அவனது தந்தைக்கும் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக முகமட் இக்பால் தெரிவித்தார்.