
கோத்தா திங்கி, செப் 12 – கோத்தா திங்கி அருங்காட்சியகத்திற்கு அருகிலுள்ள ஜாலான் கோத்தா திங்கியில் ஒரு குழந்தை கார் ஜன்னலிலிருந்து எட்டிப்பார்ப்பதைக் காட்டும் வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் வைரலானது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த வீடியோ நேற்று மதியம் மணி 1.50 முதல் 2 மணி வரை X பயன்பாட்டில் ஒரு பயனரால் பதிவேற்றப்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan யூசோப் ஒத்மான் ( Yusof othman ) தெரிவித்தார்.
கருப்பு நிற பெரோடுவா பெஸ்ஸா (Perodua Bezza ) காரை ஓட்டிச் சென்ற காரில் , ஒரு குழந்தை ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்ப்பதை அந்த பதிவில் காணமுடிந்தது.
இந்தச் சம்பவத்தை போலீஸ்துறை அறிந்துள்ளதால் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் பிரிவு 31(1)(a)யின் இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 50,000 ரிங்கிட்டிற்கு மேற்போகாமல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் யூசோப் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, கார் ஓட்டுநரின் இருக்கைக்குப் பின்னால் உள்ள ஜன்னலில் இரண்டு சிறு குழந்தைகள் தலையை நீட்டிக்கொண்டு நகரும் காரைக் காட்டும் 49 வினாடி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.