மலேசியா

களைக் கட்டிய தமிழ் விழா 2025 – கலை இரவு & நிறைவு விழா

கிள்ளான், செப்டம்பர்-14,

கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டிலான தமிழ் விழா 2025, கலை இரவோடு நேற்று சனிக்கிழமை நிறைவுப் பெற்றது.

கிள்ளான் லெட்சுமணன் மண்டபத்தில் சுமார் 150 பேர் அதில் கலந்துகொண்டர்.

இந்தியத் தூதரகப் பேராளர் Rochues சுகன்யா ஜெயகுமார், GOPIO International பொதுச் செயலாளர் ரவீந்திரன் அர்ஜூனன், மலேசிய இந்து இளைஞர் இயக்கத்தின் உதவித் தலைவர் விசித்ரா அசோகன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களோடு, தலைமையாசிரியர்கள், அரசு சாரா அமைப்பினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் அவர்களில் அடங்குவர்.

உயர் கல்விக் கூடங்களுக்கு இடையிலான பட்டிமன்றப் போட்டியில் UMT பல்கலைக்கழகத்தை வீழ்த்தி UUM பல்கலைக்கழகம் வாகை சூடியது.

சவால் கிண்ணத்தில் ஆரம்பப் பள்ளிப் பிரிவில் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியும், இடைநிலைப்பள்ளிப் பிரிவில் ராஜா மஹாடி பள்ளியும் வெற்றிப் பெற்றன.

பரதநாட்டியப் போட்டியின் ஜூனியர் பிரிவில் வி. லாவண்யாவும் சீனியர் பிரிவில் Shu Zan Yap என்ற கலையும் வெற்றிப் பெற்றனர்.

இவ்வாண்டு தமிழ் விழா கடந்தாண்டை விட மிகச் சிறப்பாக நடந்தேறியதாக ஏற்பாட்டு ஒருங்கிணைப்பாளரும் போர்ட் கிள்ளான் இந்து இளைஞர் இயக்க உதவித் தலைவருமான பிரசாத் கிருஷ்ணன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

போட்டியில் பங்கேற்ற தமிழ் மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் சிலரும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.

பல்வேறு துறைகளில் சாதித்த பிரமுகர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

டத்தோ ஸ்ரீ ஆறுமுகம் ராமசாமி, டத்தோ குமாரசாமி வீரப்பன், ராமசந்திரன் அப்பண்ணன், புவனேஷ் சுப்ரமணியம், சுப்ரமணியம் அழகிரி, பெருமாள் ராமன், பரமசிவன் ராமன் ஆகியோரே அவர்களாவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!