Latestமலேசியா

வரலாற்றுச் சாதனை; ஹோலிவூட் இசைத் துறையில் கால் பதித்த மலேசிய ராப் பாடகர் Rabbit Mac

கோலாலம்பூர், செப்டம்பர்-20,

ஹோலிவூட் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ பாடலை உருவாக்கிய முதல் மலேசியத் தமிழ் ராப் பாடகராக பிரபல ராப் இசை பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ரெபிட் மேக் (Rabbit Mac) பெயர் பெற்றுள்ளார்.

“Watch Me” என்ற அந்தப் பாடல், லாஸ் ஏஞ்சல்ஸ் ராப் கலைஞர் Amore Jones-ஸுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இது Danny Trejo, Veronica Falcon மற்றும் புதுமுகம் விஷி ஐயர் நடித்துள்ள American Warrior திரைப்படத்தின் பாடலாகும்.

படத்தை Gustavo Martin இயக்கியுள்ளார்.

இப்பாடல், 5 ஆண்டுகளுக்கு பிறகான Rabbit Mac-கின் இசை உலக மறுபிரவேசத்தையும் குறிக்கிறது.

கவலை, தனிமை மற்றும் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் மன வலிமையை வெளிப்படுத்தும் பாடலாக இது அமைந்துள்ளது.

இது அவரின் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, அனைத்துலக அளவில் மலேசிய இசைத்துறைக்கே கிடைத்த பெருமையாகும்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!