
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்
20 – நேற்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள கோத்தா டாமான்சாரா PPR பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு 5 உணவகங்கள் மற்றும் 5 வாகனங்கள் தீக்கிரையாகின.
இச்சம்பவம் குறித்த தகவல் கிடைக்க பெற்றவுடனேயே சுங்கை பூலோ தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணி வேலைகளைத் உடனடியாக தொடங்கினர் என்று சிலாங்கூர் மாநில தீ மற்றும் மீட்பு துறை (JBPM) செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் டாமன்சாரா, பெட்டாலிங் ஜெயா, ஹார்தாமாஸ் ஆகிய தீயணைப்பு நிலையங்களின் உதவியுடன் மொத்தம் 28 வீரர்கள் மீட்பு பணியில் களமிறங்கி தீயை குறிப்பிட்ட கால வரையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இதுவரை எவ்வித உயிர் சேதமும் பதிவாகவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.