
பாங்காக், செப்டம்பர் 24 — ‘மிஸ் கிராண்ட் பிராசுவாப் கிறி கான் 2026’ (Miss Grand Prachuap Khiri Khan 2026) பட்டத்தை வென்ற சுப்பன்னீ “பெபி” நொய்னொந்தாங் (Suphannee “Baby” Noinonthong,) பட்டம் வென்ற மறுநாளிலேயே அந்த பட்டத்தை இழந்தார்.
சமூக வலைதளங்களில் பரவிய அவரது சர்ச்சைக்குரிய வீடியோக்கள் காரணமாக, போட்டி குழுவினர் இம்முடிவை எடுத்ததாக அறியப்படுகின்றது.
நொய்னொந்தாங் தனது முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கோரி, வாழ்வாதார சிரமத்தால் முன்பு நிர்வாண புகைப்படங்களில் நடித்ததாகவும், சில வீடியோக்கள் சட்டவிரோத சூதாட்ட வலைத்தளங்களில் தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் மிஸ் கிராண்ட் தாய்லாந்து 2026 தேசியப் போட்டி மார்ச் மாதம் பாங்காக்கில் நடைபெறவுள்ளது.