Latestமலேசியா

MyKad அட்டை மத அடையாளத்திற்கான உறுதியான சான்று அல்ல; ஆடவரை இந்து என அறிவித்து ஈப்போ உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஈப்போ, செப்டம்பர்-24,

பேராக், தெலுக் இந்தானைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் “இஸ்லாம்” என்ற வார்த்தையுடைய அடையாள அட்டையைக் கொண்டிருந்தாலும், அவர் சட்டப்பூர்வமாக ஓர் இந்துவே தவிர, முஸ்லீம் அல்ல என்று ஈப்போ உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

அந்நபர் எந்த காலத்திலும் இஸ்லாம் மதத்தை பின்பற்றியதாக எந்த ஆதாரமும் இல்லை; தவிர, இருக்கும் பதிவுகளும் அவர் மதம் மாறியதில்லை என்பதை உறுதிப்படுத்துவதாக, நீதிபதி Bhupinder Singh கூறினார்.

அவ்விளைஞர் இந்து தாய் மற்றும் இஸ்லாத்துக்கு மதம் மாறிய தந்தைக்கு மகனாகப் பிறந்திருந்தாலும், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து ஓர் இந்துவாகவே வாழ்ந்து வருவதை நீதிபதி தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.

அடையாள அட்டை என்பது ஒருவரின் மதத்தை நிரூபிக்கும் இறுதி ஆதாரம் அல்ல என்று வலியுறுத்திய நீதிபதி, முன்பு ரோஸ்லிசா இப்ராஹிம் வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய இதே போன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டினார்.

தவிர, அவ்விளைஞரின் பெற்றோர் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டவர்கள் அல்லர்; எனவே, தந்தையின் மதத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியம் மகனுக்கில்லை எனவும் நீதிமன்றம் கூறியது.

2012-ஆம் ஆண்டு, தந்தையின் மதத்தின் அடிப்படையில் “இஸ்லாம்”எனக் குறிக்கப்பட்ட அடையாள அட்டையை JPN அவருக்கு வழங்கியது; அதை நீக்க வேண்டுமென 2021-ல் அந்நபர் தொடர்ந்த வழக்கும் நிராகரிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!