
தெலுக் இந்தான், செப்டம்பர் 26 – இன்று லாபு குபோங் சாலையில், ‘wheelchair’ பயன்படுத்திய 48 வயது மாற்றுத்திறனாளி ஒருவர் பரிதாபமாக கால்வாயில் விழுந்து உயிரிழந்தார்.
உடலின் இடப்பக்கம் செயலிழந்த நிலையில் வாழ்ந்து வந்த அந்நபர் கால்வாயில் விழுந்ததைக் கவனித்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு குழுவினர் உடனடியாக மீட்பு பணி வேளைகளில் ஈடுபட்டனர் என்று பேராக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் (JBPM) செயற்பாட்டு துணைப் பணிப்பாளர் ஷாஸ்லீன் மொஹ்த் ஹனாபியா தெரிவித்ததார்.
இந்நிலையில் கால்வாயில் விழுந்த அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.