
காஜாங், செப்டம்பர்-27,
இன்று காலை சிலாங்கூர் காஜாங்கில் உள்ள புக்கிட் காஜாங் டோல் சாவடியில் 4 வாகனங்கள் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
ஷா ஆலம் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமானது உள்ளிட்ட 2 SUV வாகனங்கள், ஒரு கார் மற்றும் 3 டன் லாரி ஆகியவை விபத்தில் சிக்கியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது.
ஒரு SUV-யிலிருந்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டது; எனினும் அது இறந்து விட்டத்தை மருத்துவ அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தினர்.
அதே SUV-யின் கீழ் சிக்கிய ஓர் ஆடவர் உட்பட விபத்தில் சம்பந்தப்பட்ட மேலும் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்