Latestமலேசியா

எங்கள் காத்திருப்பு நீண்டது, முடிவு மிகவும் துயரமானது ”- தூக்கிலிடப்பட்ட தட்சிணாமூர்த்தியின் குடும்பம் வேதனை

உலு திராம், செப்டம்பர்-27,

39 வயது மலேசியர் கே. தட்சிணாமூர்த்திக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவரது குடும்பம் அளவில்லா துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

தட்சிணாமூர்த்தி, 4 பிள்ளைகளில் ஒரே மகனாவார்; அவரை மீண்டும் பார்க்க வேண்டுமென நீண்ட நாள் காத்திருந்தோம், ஆனால் அவருக்கு நேர்ந்த முடிவு ஒட்டுமொத்த குடும்பத்தின் மனதை நொறுங்கச் செய்திருப்பதாக, அவரின் மைத்துனர் பி. பிரதாபன் வேதனையுடன் கூறினார்.

44.96 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட தட்சிணாமூர்த்தி, கடந்த வியாழக்கிழமை பிற்பகலில் தூக்கிலிடப்பட்டார்.

இன்று காலை அவரது உடல் ஜோகூர், உலு திராம் கத்தோலிக்க கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

நீண்டகாலம் சிறையில் இருந்து, இறுதியில் அவரின் வாழ்க்கை இப்படி முடிவடைந்தது சொல்ல முடியாத வேதனையென, குடும்பத்தாரும் நெருங்கிய நண்பர்களும் கூறினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!