
கோலாலம்பூர், செப்டம்பர்-28,
திறமையான ஒளிப்பதிவாளராக வலம் வந்த ஜெயகணேஷ் ஜனார்த்தனன், நேற்று முன்தினம் சரவாக், பெடாங் பகுதியில் திரைப்பட படப்பிடிப்பின் ஏற்பட்ட சாலை விபத்தில் அகால மரணமடைந்ததை அடுத்து, மலேசியத் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகமான FINAS ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
உள்ளூர் திரைப்படத் துறையில் அவர் காட்டிய தொழில்முறை திறமை, நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு மட்டுமின்றி, தன்னடக்கம், கனிவு மற்றும் மனிதநேயப் பண்புகளுக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார் என FINAS குறிப்பிட்டது.
ஜெயகணேஷின் திடீர் மறைவு, மலேசிய திரைப்படத் துறைக்கும், அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.
அவர் நல்ல மனிதராகவும், தன்னடக்கம் மிக்கவராகவும், பலரின் வாழ்க்கையைத் தொட்ட உண்மையான நற்பண்புடையவராகவும் நினைவுகூறப்படுவார்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவன் அருள் புரியவும், அவரது குடும்பத்தினர் இந்த இழப்பை சமாளிக்க வலிமை பெறவு பிராத்திப்பதாகவும் FINAS கூறியது.