
புத்ராஜெயா, அக்டோபர்-1,
Bureaucracy எனப்படும் நிர்வாக கெடுபிடிகளைக் குறைத்து, பணியிட மாற்றங்களை விரைவுபடுத்தி, சுகாதாரப் பணியாளர்களின் நலனைக் காக்கும் நோக்கில் P3S அல்லது ‘Suka Sama Suka’ என்ற புதியத் தளத்தை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
பரஸ்பர முறையில் பணியிட மாற்றத்திற்கு வாய்ப்பு வழங்கும் இத்திட்டம் இன்று தொடங்குகிறது.
முதல் கட்டமாக, தாதியர் பிரிவுக்கேத் திறந்திருக்கும்.
முந்தைய manual முறைக்கு பதிலாக இம்முறை அதற்கான விண்ணப்பங்களை இணையம் வாயிலாக செய்யலாம்.
2026 முதல், இத்தளம் மருத்துவ அதிகாரி, உதவி மருத்துவ அதிகாரி, பல் மருத்துவர், மருந்தாளர் மற்றும் உதவி மருந்தாளர் திட்டங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
விண்ணப்பங்களை https://p3s.moh.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் செய்யலாம்.
பணியிட மாற்றங்களுக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், புதிய நியமனக் கடிதம் அக்கணினி அமைப்பு முறையிலேயே தானாக உருவாகும்.
இம்முயற்சியானது வேலை முறைகளை எளிதாக்கி, வெளிப்படைத்தன்மையை உறுதிச்செய்து, சுகாதாரப் பணியாளர்களின் நலனையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும் என KKM நம்பிக்கைத் தெரிவித்தது.