
செப்பாங், அக் 2- Global Sumud Flotilla கப்பல் காஸாவை நோக்கி தனது பணியை தொடர்வதால் மலேசிய பிரதிநிதிகளை ஏற்றிச் செல்லும் மூன்று கப்பல்கள் மட்டுமே Sumud Nusantara கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பில் உள்ளன.
காஸாவில் உள்ளூர் நேரப்படி விடியற்காலை மணி 5.56 அளவில் கிடைக்கப்பெற்ற தகவலின்படி Fair Lady, Inana மற்றும் Free Willy, ஆகிய கப்பல்கள் காஸாவை நோக்கி நேரடியாகப் பயணம் செய்தபோது தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.
இந்த கப்பல்களில் Zainal Rashid, Ustaz Muhammad ) , Razali Awang , Haroqs மற்றும் டாக்டர் Taufiq ஆகிய மலேசியர்கள் இருப்பதாக உறுதிப்பட்டுள்ளது.
17 மலேசிய பிரதிநிதிகள் கட்டளை மையத்துடனான தொடர்பை இழந்ததாகவும், 12 பேர் இஸ்ரேலிய கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் முந்தைய அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த ஆகக்கடையான தகவல்கள் வந்துள்ளன.
Barcelona, Sicily, Tunis, மற்றும் Greece உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து புறப்பட்ட இந்த புளோட்டிலாவில் 44 கப்பல்கள் உள்ளன.
23 மலேசிய பிரதிநிதிகள் நேரடியாக காசாவிற்கு பயணமான வேளையில் ,இதர நால்வர் கண்காணிப்புக் கப்பலில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Musa Nuwayri , Balqis மற்றும் Sul Aidil ஆகியோர் Alma கப்பலலிலும் Zizi Kirana Huga கப்பலிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.



