
கோலாலம்பூர், அக் 2 – காஸாவிற்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை கொண்டுச் சென்ற மலேசியா, ஆசியான் மற்றும் அனைத்துலக தன்னார்வலர்கள் மற்றும் ஆர்வலர்களை இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பதை தொடர்ந்து அவர்களின் உடனடி விடுதலையை உறுதி செய்யும் முயற்சியில், தாமும் தனது குழுவினரும் அரசதந்திர வழிகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களின் குடும்பங்களுக்கும், இந்த சவாலான நேரத்தை எதிர்கொள்வதில் வலிமையையும் துணிச்சலையும் பெற்றிருக்க வேண்டும் தனது முகநூலில் அன்வார் பதிவிட்டுள்ளார்.
விடுதலையை நோக்கிய ஒவ்வொரு செயல்முறையின் நடவடிக்கை குறித்த முடிவுகளும் முன்னேற்றமும் அவ்வப்போது தெரிவிக்கப்படும்.
அனைத்து கைதிகளும், குறிப்பாக மலேசியர்கள், பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்க ஒன்றாக பிரார்த்தனை செய்வோம் என அன்வார் தெரிவித்துள்ளார்.