Latestமலேசியா

SWCorp-க்கு ஊராட்சி மன்றங்கள் RM200 மில்லியன் கடன் வைத்துள்ளன

கோலாலாம்பூர், அக்டோபர்-2 – திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழகமான SWCorp-க்கு ஊராட்சி மன்றங்கள் வைத்துள்ள கடன், இப்போது RM200 மில்லியனுக்குக் குறைந்துள்ளது; முன்பு கிட்டத்தட்ட RM500 மில்லியனாக அது இருந்தது.

பொது சுத்தம் செய்யும் சேவை ஒப்பந்தங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிச் செய்வதில் அரசாங்கத்தின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளின் விளைவாக, அந்த 60 விழுக்காடு குறைப்பு சாத்தியமானதாக, வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.

ஊராட்சி மன்றங்கள் கடன்களைச் செலுத்தத் தவறினால், SWCorp-ன் சேவைகளின் தரம் மற்றும் செயல்திறனை அது பாதிக்கக்கூடும் என்பதை அவர் நினைவுபடுத்தினார்; அவை அந்த அரசு நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளாகும் என்றார் அவர்.

பாங்கி அவென்யூ மாநாட்டு மையத்தில் நான்காவது மலேசிய திறன் சான்றிதழ் பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு அவர் அவ்வாறு சொன்னார்.

இதில் SWCorp தலைவர் Hee Loy Sian மற்றும் அதன் தலைமை நிர்வாக இயக்குனர் Khalid Mohamed ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!