
செனாவாங், அக்டோபர்-3 – சிரம்பான், செனாவாங் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 10 வயது சிறுவன், கழுத்தில் அழுத்தம் ஏற்பட்டதாலேயே உயிரிழந்ததாக உடற்கூறு சோதனை உறுதிச் செய்துள்ளது.
சிறுவனின் உடலில் வேறு எந்தக் காயங்களும் இல்லையென,நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் Alzafny Ahmad தெரிவித்தார்.
இதுவரை 27 பேரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துக்குக் காரணமான சூழ்நிலைகளை கண்டறிய விரிவான விசாரணையும் நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்.
முன்னதாக பள்ளிக் கழிவறையில் மயக்க நிலையில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டதானது, பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என போலீஸ் உறுதியளித்துள்ளது.



