
புத்ராஜெயா, அக்டோபர்-4,
காசாவை நோக்கிய GSF எனும் Global Sumud Flotilla மனிதநேய உதவிக் குழுவில் இடம் பெற்று, இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட அனைத்து 23 மலேசியத் தன்னார்வலர்களும் 48 மணி நேரங்களில் அங்கிருந்து விமானம் மூலம் வெளியேற்றப்படுவர்.
துருக்கியே நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் அல்லது பெருநகர் அங்காராவில் அவர்கள் தரையிறங்குவர் என, Sumud Nusantara கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை இயக்குநர் Sani Araby Abdul Alim தெரிவித்தார்.
மலேசியர்களைப் பாதுகாப்பாக தாயகம் கொண்டு வரும் முயற்சிக்கு துருக்கி தலைமையேற்கும்.
இந்த ஏற்பாடு சாத்தியமானதற்காக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துருக்கியே அதிபர் Recep Tayyip Erdogan இருவருக்கும் அவர் நன்றித் தெரிவித்தார்.
Flotilla கப்பல்களில் தடுத்து வைக்கப்பட்ட மலேசியர்கள் உள்ளிட்ட அனைத்து தன்னார்வலர்களும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு முன்னதாகக் உறுதிப்படுத்தியது.
அதோடு ஐரோப்பாவுக்கு அவர்கள் நாடு கடத்தப்படுவர் என்றும் அது கூறியது.
இவ்வேளையில், இந்த GSF குழுவில் இடம்பெற்று ஆனால் பயணத்தை முடிக்காத 5 மலேசியத் தன்னார்வலர்கள், நேற்று முன்தினம் பாதுகாப்பாக நாடு வந்து சேர்ந்தனர்