
கோலாலம்பூர், அக்டோபர்- 6,
காலாவதியான வாகன பதிவு எண்களை விற்பனை செய்யும் நோக்கில் சாலைப் போக்குவரத்து துறை (JPJ) ‘ebaki’ எனப்படும் புதிய ஆன்லைன் அமைப்பை உருவாக்கி வருகிறது.
இந்த அமைப்பு 2026 அக்டோபரில் செயல்படுத்தப்படும் என தேசிய தணிக்கைத் தலைவரின் 2024 நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை பதிவு எண் விற்பனை மூலம் JPJ-க்கு 1.648 பில்லியன் ரிங்கிட் வருவாய் கிடைத்துள்ள நிலையில் காலாவதியான எண்களை விற்பனைக்கு உட்படுத்தினால், குறைந்தபட்சம் 115.96 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வருவாய் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது 375,792 காலாவதியான எண்களும், 134 தடையிடப்பட்ட எண்களும் விற்பனை செய்யப்படாமல் உள்ளன என்று குறிப்பிடப்பட்டது.
எண் விலை நிர்ணயத்தில் மாநிலங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும், mySIKAP அமைப்பில் குறைந்தபட்ச விலையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



