
ஷா ஆலாம், அக்டோபர்-7,
வட்டி முதலை தொடர்பான புகாரில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக
இரு போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், உடனடி உள் விசாரணை தொடங்கியுள்ளது.
அவர்களில் ஒருவர், வட்டி முதலைப் பற்றிய புகாரை வாபஸ் பெறுமாறு புகாதாரருக்கு RM500 லஞ்சம் வழங்க முயன்றதாக கூறப்படுகிறது.
இருவரின் பெயர்களும் வெளியிடப்படவில்லை.
குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது மக்களின் நம்பிக்கையைக் காப்பது போலீஸ் துறையின் முதன்மை நோக்கம் எனவும் சிலாங்கூர் போலீஸ் கூறியது.
வட்டி முதலைக்கு எதிராக தான் செய்த போலீஸ் புகாரை மீட்டுக் கொண்டால் 500 ரிங்கிட் தருவதாகவும், புகார் செய்யும் போது தாம் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட நபர் முன்னதாக குற்றம் சாட்டியிருந்தார்.