
சுங்கைப் பட்டாணி, அக்டோபர் -8,
சுங்கைப் பட்டாணி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சமயக் கல்வி மையத்தின் தங்கும் விடுதியிலிருந்து தப்பிச் சென்ற 12 வயது சிறுமி, அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். பாதிக்கப்பட்ட அச்சிறுமி அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் பேரணியைப் பார்ப்பதாகக் கூறி கல்வி மையத்தின் விடுதியிலிருந்து தனியாக நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் செமலிங் பகுதியில் சாலையோரத்தில் அச்சிறுமிக்கு தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அச்சிறுமியை அனுகியுள்ளனர்.
19 மற்றும் 20 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் அச்சிறுமியை செம்பனை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றதோடு அவர்களில் ஒருவன் அச்சிறுமியை கற்பழித்ததோடு மற்றொருவன் அச்சிறுமியை மானப்பங்கப்படுத்தியுள்ளான். பாதிக்கப்பட்ட அச்சிறுமி தனது கல்வி மையத்திற்கு திரும்பி வந்து தனக்கு ஏற்பட்ட அவல நிலை குறித்து ஆசிரியரிடம் கூறியதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உதவுக்கூடிய இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார். அவர்களில் ஒருவன் வேலையில்லாதவன் என்பதோடு மற்றொருவன் லோரி ஓட்டுநர் ஆவான். தண்டனைச் சட்டத்தின் 375 பி பிரிவின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
20 வயது சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நம்பப்படுகிறது, மற்றொருவர் அவளை பாலியல் வன்கொடுமை மட்டுமே செய்தார். இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375b யின் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.