
கோலாலம்பூர், அக்டோபர்-10,
வரி செலுத்தப்படாத 200,000 ரிங்கிட்டுக்கும் மேலான மதிப்பைக் கொண்ட மதுபானங்களை வைக்கும் கிடங்காக சித்தியவானில் பயன்படுத்தப்பட்டு வந்த பங்களா ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கம்போங் ஆச்சேவிலுள்ள அந்த பங்களாவில் மாலை மூன்று மணியளவில் முதலாவது வட்டார மேரின் போலீஸ் கமான்டர் துணை கமிஷனர் ருஸ்லி செ அரி (Rusley Chi Ari ) தலைமையிலான குழு அந்த சோதனையை மேற்கொண்டது. அப்போது Toyota Hilux வாகனத்தை ஓட்டிவந்த ஆடவர் ஒருவர் அந்த பங்களாவுக்கு வந்து சேர்ந்தபோது அந்த வாகனத்திற்குள்ளும் மதுபானங்கள் இருந்த பல்வேறு போத்தல்களைக் கொண்ட பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த பங்களா தனக்கு சொந்தமானது என ஒப்புக் கொண்ட அந்த ஆடவர் பின்னர் கைது செய்யப்பட்டார். அந்த பங்களாவுக்குள் இருந்த பெரிய அளவிலான மதுபானங்கள் அங்கிருந்த பெட்டிகளில் இருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. மொத்தம் 344 பெட்டிகளில் 3,882 போத்தல்களைக் கொண்ட பல்வேறு பெயர்களைக் கொண்ட 2,846 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பப்பட்டன. இந்த சோதனையின்போது அந்த பங்களாவின் பாதுகாவலர் என நம்பப்படும் 24 வயதுடைய வியட்னாம் ஆடவரும் கைது செய்யப்பட்டதோடு , மேல் விசாரணைக்காக 48 வயதுடைய வாகன ஓட்டுநரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என Rusley chi Ari தெரிவித்தார்.