
புக்கிட் காயூ ஹித்தாம், அக்டோபர் 13 –
நேற்று, புக்கிட் காயூ ஹித்தாம் எல்லையின் வழி, நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 11 வெளிநாட்டவர்கள் மலேசிய எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவன (AKPS) அதிகாரிகளால் தடுக்கப்பட்டனர்.
இவர்கள் புக்கிட் காயூ ஹித்தாம், ICQS வளாகத்திற்கு ல் வந்தபோது, அவர்களின் நுழைவு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தடுக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்தியா, கொரியா, சீனா, இலங்கை மற்றும் தாய்லாந்து நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் நுழைவு விதிமுறைகளை பூர்த்தி செய்யாததால், அதே வழியாக தத்தம் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நடவடிக்கை மலேசிய எல்லைப் பாதுகாப்பையும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தும், AKPS புக்கிட் காயு ஹித்தாமின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது



