Latest

சாங்கி விமான நிலையத்தில் துயரம்; ஜுவல் (Jewel) கடைத் தொகுதியிலிருந்து விழுந்து பெண் மரணம்

சிங்கப்பூர், அக்டோபர்-17,

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் நேற்று நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் 56 வயது மாது ஒருவர், ஜுவல் (Jewel) கடைத் தொகுதியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

சம்பவத்தை பார்த்தவர்கள் ஒரு பெரிய சத்தம் கேட்டதாக தெரிவித்தனர்.

சிலர் அப்பெண்ணுக்கு CPR முதலுதவி சிகிச்சைகளை வழங்கியதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

பிற்பகல் சுமார் 2 மணிக்கு சம்பவம் இடம் விரைந்த தீயணைப்பு – மீட்புப் படையினர்,
பெண் மயக்க நிலையில் காணப்பட்டதால், அவரை உடனடியாக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவர்களால் அம்மாதுவைக் காப்பாற்ற முடியவில்லை.

ஜுவல் நிர்வாகம், அம்மாதுவின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், விசாரணையில் போலீஸுக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் ‘இயற்கை அல்லாத மரணம்’ என வகைப்படுத்தப்பட்டு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!