Beyond property, he builds trust — Vela Thebahumaran, the property agent

கோலாலம்பூர், அக் 17 –
நாம் வாங்கும் சொத்து தரமான ஒன்றாக இருக்க வேண்டுமெனில் அதற்கு நம்பிக்கையுரியவரின் வழிகாட்டுதல் மிக அவசியம்.
அப்படி தனது சேவையினால் வடக்கு முதல் கிழக்கு வரை என தீபகற்ப மலேசியாவில் நற்பெயரை பெற்றிருப்பவர்தான் சொத்து முகவர் வேலா தீபகுமாரன் என்பவர்.
கோவிட் தொற்று காலக்கட்டத்தில், வேலை இல்லாமல் இருந்த சமயம், ஜோகூர் பாரு, தம்போய் பகுதியில் ஒரு சொத்து முகவர் நிறுவனத்தில், flyer distribution எனப்படும் விளம்பரத்தாள் விநியோகம் செய்வது மூலம் இத்துறையில் தனது பயணத்தை தொடங்கிய வேலா, பின்னர் படிபடியாக தனது அனுபவத்தினால் முன்னேறி மக்களின் நம்பிக்கையைப் பெற்று இதுவரை 200க்கும் மேற்பட்ட சொத்துகளை ஜோகூரில் மட்டுமே விற்றுள்ளார்.
தற்போது SP SAM PROPERTIES நிறுவனத்தில் assistant vice precident- ஆக உயர்ந்து நிற்கும் வேலா, FUDASAN REAL ESTATE எனும் தனது சுய நிறுவனத்தையும் துவங்கியுள்ளார்.
ஆரம்பக் காலக்கட்டத்தில் SPM முடித்த பிறகு சிங்கப்பூரில் டிப்ளோமா படிப்பை படித்துக் கொண்டே கிடைத்த வேலைகளை எல்லாம் செய்த வேலா, வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு போக வேண்டுமென்றால், கல்வி அடைவுநிலை முக்கியம் என உணர்ந்து, UTM பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக தனது டிகிரி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
தொடக்கக்கட்டத்தில் விற்பனை கிடையாது. விற்பனை வந்தால்தான் வருமானம். ஆனால் மனம் தளராமல், நம்பிக்கையை மூலதனமாக கொண்டு இத்துறையில் வெற்றியும் பெற்றுள்ளார் இவர்.
அதோடு, தனது பெரும்பாலான வாடிக்கையாளர்களாக இந்தியர்களைக் கொண்டிருக்கும் இவர், இந்தியர்களுக்கு நிலம், வீடு, ஆகியவற்றை சொந்தமாக வாங்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்.
வேலாவின் கதை நமக்குச் சொல்வது ஒன்றே ஒன்றுதான், வாய்ப்புக்காக காத்திருக்காமல், நமக்கான வாய்ப்பை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே.
அப்படி தனக்கான பாதையை உருவாக்கி, அதில் முழு ஈடுபாட்டுடன் உழைப்பை போட்டு தனக்கான வருமானத்தை தேடுவதோடு பிறரும் சரியான சொத்துகளை கொள்முதல் செய்வதற்கு வழிகாட்டியாகவும் செயல்படுகிறார்.
அப்படி உங்களுக்கும் சொத்து வாங்குவதற்கான எண்ணம் இருப்பின்,தாராளமாக இவரை தொடர்புக் கொள்ளலாம்