
கோலாலம்பூர், அக்டோபர்- 17 ,
மலாயா பல்கலைக்கழக வளாகத்தின் தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்த மாணவர் ஒருவர் மரணம் அடைந்தார். இன்று மாலை மணி 3.30 அளவில் இந்த பரிதாபச் சம்பவம் நிகழ்ந்தது. மலாயா பல்கலைக் கழகத்தின் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த அந்த மாணவர் இறந்தாக மலாயா பல்கலைக்கழகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தது.
மரணம் அடந்த அந்த மாணவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மலாயா பல்கலைக்கழக மாணவர்களும் பணியாளர்களும் தங்களது அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துக் கொண்டனர். இந்த சிரமமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு முழு ஆதரவையும் உதவியையும் பல்கலைக்கழக மாணவர் விவகாரத்துறை வழங்கி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும்
விசாரணையில் உள்ளது. மாணவரின் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்கவும், அச்சம்பவம் குறித்து எந்தவிதமான ஊகங்களையும் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதையும் தவிர்க்குமாறு பொதுமக்களை மலாயா பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டது.