
கோலாலம்பூர், அக்டோபர் 18 – முதன் முறையாக வணக்கம் மலேசியா தீபாவளி பாடலை வெளியிட்டு, அதற்கு பெரும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.
அந்த மகிழ்ச்சியை மேலும் குதூகலமாக்கும் வகையில் கவர்ச்சிகரமான பரிசோடு “ வணக்கம் மலேசியா தீபாவளி பாடலுக்கான ஆடல் போட்டியை உங்களுக்காக நாங்கள் கொண்டு வருகிறோம்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்தப் பாடலை பயன்படுத்தி உங்களின் மகிழ்ச்சிகரமான தீபாவளி தருணங்களை வீடியோவாகவோ ரீல்ஸாகலோ செய்து, சமூக ஊடகங்களில் பதிவேற்றி, வணக்கம் மலேசியாவையும் tag செய்வதோடு #vanakkamdeepavali2025 hashtag-கோரி பதிவிட வேண்டும்.
மிகச் சிறந்த வீடியோ அல்லது ரீல்ஸை பதிவு செய்து வெல்பவருக்கு மாபெரும் பரிசாக, கேரளா கொச்சின் செல்வதற்கான Batik Air விமான டிக்கெட் பரிசாக வழங்கப்படும்.
உங்கள் வீடியோ அல்லது ரீல்ஸை பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 26-ஆம் திகதி.
எனவே, தீபாவளியை வணக்கம் மலேசியாவோடு இணைந்துகொண்டாடி மகத்தான பரிசை வெல்லத் தவறாதீர்கள்.