
சிரம்பான், அக்டோபர்-23,
சிரம்பானில் 35 வயது தந்தை ஒருவர் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அவர் தனது மனைவியுடன் இம்மாதக் கடைசியில் மூன்றாவது குழந்தையை எதிர்பார்த்திருந்து காத்திருந்தார் என்பது இன்னும் சோகமாகும்.
Lee Kah Chin திடீரென மயங்கி விழுந்து மூர்ச்சையானார்; உடனிருந்த நண்பர்கள் CPR முதலுதவி சிகிச்சை வழங்கி இதய துடிப்பை மீட்டெடுக்க முயன்றனர், ஆனால் பயனளிக்கவில்லை.
மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட போது அவர் மரணமடைந்து விட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
மருத்துவர்கள், இது _cardiac arrest_ எனப்படும் திடீர் இதய முடக்கமாக இருக்கலாம் என கூறினர்; முழுக் காரணத்தை அறிய சவப்பரிசோதனை நடைபெற்று வருகிறது.
மயங்கி விழுவதற்கு முன் அவரிடம் எந்த உடல் நலக் குறைவும் காணப்படவில்லை; Lee ஆரோக்கியமானவர் என்பதோடு உடற்பயிற்சிகளிலும் விளையாட்டுகளிலும் ஆர்வமாக ஈடுபட்டு வந்தவர் என்றும் நண்பர்கள் கூறினர்.
இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரும் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பல வலைத்தளவாசிகள் இதனை உடல் ஆரோக்கிய பரிசோதனையின் அவசியத்தை நினைவூட்டும் நிகழ்வாகக் கருதுகின்றனர்.