
கோலாலம்பூர், அக்டோபர்-23,
47-ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டை முன்னிட்டு கோலாலம்பூரில் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 7.45 மணி வரை, கட்டங்கட்டமான போக்குவரத்து மூடலுக்கான முழு ஒத்திகை நடைபெறுகிறது.
இந்த ஒத்திகை, கோலாலம்பூர் மாநாட்டு மையமான KLCC சுற்றியுள்ள முக்கிய சாலைகள் உட்பட பல பாதைகளில் நடைபெறும்.
வரும் வெள்ளிக்கிழமை வரை அரச மலேசியப் போலீஸ்படை இதனை மேற்கொள்ளும்.
மாநாடு அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறவுள்ளது.
எனவே பொது மக்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடவும், வழிகாட்டும் செயலிகளை (navigation apps) பயன்படுத்தவும், மற்றும் போக்குவரத்து போலீஸ் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.