
சியோல், அக்டோபர்-25 – தென் கொரியாவில் பெண்ணொருவர் கரப்பான் பூச்சியை கொல்ல முயன்றது பெரும் விபத்தில் முடிந்துள்ளது.
தலைநகர் சியோலுக்குத் தெற்கே உள்ள ஓசான் நகரில், ஒரு பெண் aerosol spray மற்றும் விளக்கேற்றும் லைட்டரை பயன்படுத்தி கரப்பான் பூச்சியை எரிக்க முயன்றபோது தீ விபத்து ஏற்பட்டது.
அத்தீயில் புதிதாக குழந்தை பெற்ற ஒரு சீனப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்; மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
தீ வேகமாகப் பரவியதால் குடியிருப்பவர்கள் தப்பிக்க முயன்ற போது, 30 வயது அப்பெண் ஜன்னல் வழியாக கீழே விழுந்து உயிரிழந்தார்.
அவரது கணவர் மற்றும் குழந்தை சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
சந்தேக நபரான 20 வயது பெண் விசாரணைக்காகக் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அலட்சியத்தால் மரணம் விளைவித்தது மற்றும் தீவைத்த குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கவுள்ளார்.
இச்சம்பவம், சாதாரண கவனக்குறைவால் கூட எவ்வளவு பெரும் விபத்துகள் ஏற்படலாம் என்பதைக் காட்டுவதாக தென் கொரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



