
பொந்தியான், அக்டோபர்-27,
ஜோகூர் பொந்தியானில் MPV வாகனமொன்றில் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடி தலைகீழாக பறக்கவிடப்பட்ட சம்பவம் போலீஸாரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பலர் அதை தேசியக் கொடிக்கு நிகழ்ந்த அவமதிப்பாகக் கருதியுள்ளனர்.
இதையடுத்து போலீஸ் தரப்பில் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
44 வயது அந்த MPV உரிமையாளர் விசாரணைக்காக பொந்தியான் போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, அவரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது.
முன்னதாக வைரலான வீடியோவில், சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த MPV வாகனத்தை நெருங்கிய ஒரு லாரி ஓட்டுநர், அதன் முன்பக்க கண்ணாடியில் தேசியக் கொடி தலைக்கீழாக பறக்க விடப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி கடிந்துகொண்டதோடு, அதனை விருட்டென பிடுங்கினார்.
அவரின் செயலுக்கு வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்தது ஒருபக்கம் இருக்க, பொது மக்கள் தேசியச் சின்னங்களை மரியாதையுடன் கையாள வேண்டும் எனவும் நினைவூட்டப்பட்டது.



