ஆசியான் மாநாட்டிலிருந்து பிராபோவோ சீக்கிரமே புறப்பட்டதற்கு RTM தவறு காரணமா? இந்தோனேசியத் தூதர் மறுப்பு

கோலாலாம்பூர், அக்டோபர்-28,
47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்கான தனது மலேசியப் பயணத்தை, இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோ பாதியிலேயே முடித்துக் கொண்டு புறப்பட்டதற்கு, RTM அவரின் பெயரை தவறாக குறிப்பிட்டது காரணமல்ல,
மலேசியாவுக்கான இந்தோனேசியத் தூதர் ஹெர்மானோ அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
முன்பதாக, மாநாட்டின் நேரலை வர்ணனையின் போது RTM-மில் பிராபோவோவை குறிப்பிடும் போது, முன்னாள் அதிபர் Joko Widodo என தவறுலதாக அவரை அறிமுகப்படுத்தினர்.
இதனால் கோபித்துக்கொண்டு பிராபோவோ பாதியிலேயே போய் விட்டதாக வதந்திகள் வெளியாகியுள்ளன; அதில் கொஞ்சமும் உண்மையில்லை.
மாறாக, உள்நாட்டில் இறுக்கமான நிகழ்ச்சி நிரல்கள் இருப்பதன் காரணமாகவே பிராபோவோ நேற்றே ஜாகார்த்தா திரும்பியதாக ஹெர்மோனோ சொன்னார்.
3-நாள் உச்சநிலை மாநாடு முழுவதும் இங்கு தங்கி பங்கேற்க பிராபோவோ தொடக்கத்தில் திட்டமிட்டிருந்தாலும், நேற்று பிற்பகலே தனது பயணத்தை சுருக்கிக் கொள்ள அவர் முடிவு செய்தார்.
பிராபோவோவுக்கு பதிலாக அவரின் அமைச்சர்கள் எஞ்சிய கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.



