
ஜோகூர் பாரு, அக்டோபர் 30 –
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்றின் வாகன எண் பலகையில் சந்தேகத்திற்கிடமான வேறுபாடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று ஜோகூர் மாநில சாலை போக்குவரத்து துறை (RTD) அதிகாரிகள், சுல்தான் இஸ்கண்டார் (BSI) சோதனைச்சாவடியில் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
சோதனையின் போது அதிகாரிகள் காரை நிறுத்தி ஆய்வு செய்தபோது, காட்டப்பட்ட பதிவு எண் வேறு மாடல் வாகனத்தைச் சேர்ந்ததென உறுதி செய்யப்பட்டது.
அந்த ஓட்டுநருக்கு இதற்கு முன்னதாக போக்குவரத்து சட்டத்தின் கீழ், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்காதது, வாகன பதிவு பலகை தவறாக பயன்படுத்தியது, மேலும் சட்டவிரோத பயன்பாட்டுக்கான வாகன பறிமுதல் அறிவிப்பு போன்ற நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட அந்தக் கார் ஜோகூர் RTD தலைமையகத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணை முடியும் வரை அல்லது உரிமையாளர் சட்ட விதிமுறைகளை பின்பற்றும் வரை வாகனங்கள் தற்காலிகமாக RTD காவலில் வைக்கப்படலாம் எனவும் சுல்தான் இஸ்கண்டார் (BSI) சோதனைச்சாவடியில் பணியாற்றும் RTD ஜோகூர் அமலாக்க குழு, மலேசியா சிங்கப்பூர் நிலப் பாதையில் சட்டத்தையும் சாலைப் பாதுகாப்பு விதிகளையும் கடைப்பிடிக்கச் செய்வதில் தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுக்கும் என்று தெரிவித்துள்ளது.



