Latest

2022 முதல் பள்ளிகளில் 112 கற்பழிப்பு, 687 பகடிவதை சம்பவங்கள்; சைஃபுடின் தகவல்

கோலாலம்பூர், அக்டோபர்-31,

நாட்டில் உள்ள பள்ளிகளில் 2022 முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரை மொத்தம் 112 கற்பழிப்புச் சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் அந்த அதிர்ச்சிகரமான தகவலை அம்பலப்படுத்தினார்.

அவற்றில் 2022-ல் 27 சம்பவங்களும், 2023-ல் 22 சம்பவங்களும், கடந்தாண்டு 29 சம்பவங்களும் பதிவாகின.

இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் அத்தகைய 34 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பெரும்பாலான குற்றவாளிகளும் பாதிக்கப்பட்டவர்களும் மாணவர்களே எனவும், பல சம்பவங்கள் பள்ளி வளாகத்திலோ அல்லது அதன் அருகிலோ நிகழ்ந்ததாகவும் சைஃபுடின் சொன்னார்.

அதே காலகட்டத்தில் 687 பகடிவதை சம்பவங்களும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

2022-ல் 205, 2023-ல் 186, 2024-ல் 191-ராகவும் பதிவாகிய பகடிவதை சம்பவங்கள், இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் 105-தாக பதிவாகின.

பகடிவதையை கிரிமினல் குற்றமாக வகைப்படுத்தப்படுத்தும் குற்றவியல் சட்ட திருத்தத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் 87 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

இந்தச் சட்டம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், பள்ளிகளில் பொறுப்பை வலுப்படுத்தவும் நோக்கமாக கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!