Latest
பெர்லிஸில் நண்பர்களுடன் ஆற்றில் விளையாடியப் போது துயரம்; 2 சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலி

கங்கார், நவம்பர்-1,
குவாலா பெர்லிஸ், பாடாங் பெசார் செலாத்தானில் ஆற்றில் குளித்து விளையாடிய போது, 2 சிறுவன்கள் நீரில் மூழ்கி பலியாயினர்.
நேற்று மாலை 4 மணியளவில் அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
5 நண்பர்கள் ஆற்றில் விளையாடியதில், மூவரை கிராம மக்கள் காப்பாற்றினர்.
எனினும் 8 வயது Iskandar Zulkarnain Mohd Faizal, 10 வயது Mohd Yuhanis இருவரும் பரிதாபமாக நீரில் மூழ்கி மாண்டனர்.
சடலங்கள், சவப்பரிசோதனைக்காக கங்கார் துவாங்கு ஃபாவ்சியா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டன.
காப்பாற்றப்பட மூவரில் ஒரு சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளான்.



