நவம்பர் 4 பிரீமியர் திரையீட்டை ஒட்டி ‘கைதி’ Dilli-யும் ‘Banduan’ Dali-யும் நேரில் சந்தித்தத் தருணம்

கோலாலம்பூர், நவம்பர்-3,
‘கைதி’ படத்தின் மலாய் தழுவலான ‘Banduan’ படத்தின் பிரீமியர் சிறப்புத் திரையீட்டில் பங்கேற்பதற்காக, நடிகர் கார்த்தி மலேசியா வந்துள்ளார்.
அவரை, Banduan கதாநாயகன் Aaron Aziz, KLIA-வில் நேரில் வரவேற்றார்.
இருவரும் நேரில் சந்தித்த அந்தத் தருணத்தை, “நவம்பர் 4-ஆம் தேதிக்காக Dilli-யும் Dali-யும் கை கோர்க்கிறோம்” என்ற வாசகத்தோடு Aaron Aziz தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவேற்றியுள்ளார்.
‘கைதி’ படத்தில் கார்த்தியின் பெயர் Dilli, Banduan-னில் Aaron Aziz-சின் பெயர் Dali ஆகும்.
6,000 பேருக்கும் மேல் அவ்வீடியோவைப் பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற படமான ‘கைதி’ மலாய் மொழியில் எடுக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த Banduan படத்தின் சிறப்பு திரையீடு நாளை KLCC-யில் நடைபெறும் நிலையில், நவம்பர் 6 முதல் நாடு முழுவதும் இது திரைக்கு வருகிறது.



