
கோலாலம்பூர், நவ 4- ஜோகூர் சிகமாட்டில் (Segamat) நேற்று சிறிய அளவிலான
நில நடுக்கம் ஏற்பட்டது.
ரெக்டர் கருவியில் 2.7 அளவில் பதிவான நிலநடுக்கம்
திங்கட்கிழமை இரவு மணி 7.55க்கு ஏற்பட்டதாக மிட்மலேசியா
எனப்படும் மலேசிய வானிலைத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சிகமாட்டிலிருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில்
இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சிகமாட் மற்றும் சுற்று வட்டார பகுதியிலும் இந்த நில அதிர்வை உணர முடிந்ததாக முகநூலில் Met மலேசியா பதிவிட்டது.
ஆகஸ்டு 24 ஆம்தேதி முதல் முறையாக ரெக்டர் கருவியில் 4.1 அளவில் சிகமாட்டில் நில நடுக்கம் ஏற்பட்டது.
சிகமாட்டிலிருந்து 5 கிலோமீட்டர் மேற்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அருகேயுள்ள குளுவாங் மற்றும் பத்து பஹாட்டிலும் சிறிய அளவில் நில நடுக்கம் உணரப்பட்டது.
செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் ஜோகூரில் குறைந்தது எட்டு முறை சிறிய அளவில் நில நடுக்கம்
ஏற்பட்டிருப்பது குறிபிடதக்கது.



