Latest

ஆசிரியர்கள் விருப்பம்போல் தேர்வுக்கான கேள்விகளை தயாரிக்க முடியாது

கோலாலம்பூர் , நவ 6 – இந்நாட்டிலுள்ள ஆசிரியர்கள் தங்கள் விருப்பம்போல் தேர்வுக்கான கேள்விகளை தயாரிக்க முடியாது என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மாறாக தேர்வு வாரியத்தால் வழங்கப்படும் JSU எனப்படும் தேர்வு விவரக்குறிப்பு அட்டவணை தரநிலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கல்வித்துறை துணையமைச்சர் வோங் கா வோ ( Wong Kah Woh ) தெரிவித்தார்.

தேர்வு வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் தேர்வு விவரக் குறிப்பு அட்டவணை தரநிலைகளைத் தயாரித்துள்ளது. ஆசிரியர்கள் கேள்விகளைத் தயாரிக்கும்போது, ​​அவர்கள் தேர்வு வாரியத்தால் வழங்கப்படும் JSU தரநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.

தேர்வுக்கான கேள்விகளை தயாரிக்க தர நிலைகளுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளததால் கடந்த இரண்டு ஆண்டுகளில் எல்லாம் சீராக நடந்து வருகிறது என இன்று மக்களவையில் வாய்மொழி கேள்வி பதில் அமர்வின்போது
Wong சுட்டிக்காட்டினார்.

மதிப்பீட்டு இடைவெளி இல்லாத வகையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகளுக்கு இடையில் சீரான தன்மை அல்லது மதிப்பீட்டுத் தரநிலைகளை உறுதி செய்வதற்கு கல்வி அமைச்சு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தபோது Wong இத்தகவலை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!